Header Ads

test

சிங்கராஜவன ஆய்வு முகாம்

விலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழக இலங்கை களப்பறவையியல் குழுவின் வழிகாட்டலில், சி.சி.எச் (CCH) நிறுவன ஒழுங்கமைப்பில், NDB வங்கியின் அனுசரனையுடன் சிங்கராஜவன மழைக் காட்டில் நடைபெற்ற கள கற்கைகள் மற்றும் ஆய்வு முகாமில் யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இயற்கை ஊக்குவிப்பு கழக அங்கத்தவர்களாக அதிபர், பிரதி அதிபர், உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், சி.சி.எச் (CCH) நிறுவன நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


விலங்கியல் துறை, கொழும்பு பல்கலைக்கழகததில் நடைபெற்ற விரிவுரைகளை தொடர்ந்து சிங்கராஜவனத்தில் மூன்று நாட்கள் இவ் ஆய்வு முகாம் நடைபெற்றது.

வாழ்நாள் பேராசிரியர் சரத் கொட்டகம, பேராசிரியர் நிகால் டயவன்ச  ஆகியோர் விரிவுரைகளையும் சந்திர லால் , ஸ்ரீ.கஜேந்திரன்  ஆகியோர் கள கற்கைகளையும்  மேற்கொண்டிருந்தனர்.

யாழ் மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக 2011 ம் ஆண்டு சிங்கராஜவனம் சென்ற பாடசாலையாக யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments