Header Ads

test

ஆளுநருக்கு அள்ளி வீசப்படுகின்றதா? விந்தன்

ஜரோப்பிய நாடுகளிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு ஆளுநர் மற்றும் மனைவி ஆகியோருடைய செலவிற்கென சுமார் 45 இலட்சம் வடமாகாணசபை நிதி செலவு செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனரட்ணம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நடப்பாண்டிற்கென ஒதுக்கப்பட்டதாக அறிவித்த 3630 மில்லியன் ரூபா நிதியில் 1450 மில்லியன் ரூபா மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிவுறுவதற்கு இருமாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 2180 மில்லியன் நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லையென வடமாகாண திறைசேரி அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது பெரும்பிரயத்தனத்தின் மத்தியில் 50 மில்லியனை மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதனிடையே நடந்து முடிந்த பெருமளவிலான வேலைகளி;ற்கான நிதியை அரசு ஒதுக்கி வழங்காமையால் தொடர்ந்து வேலைகளை முன்னெடுக்க ஒப்பந்த நிறுவனங்கள் மறுதலித்துள்ளன.இதனால் பெரும் தேக்கநிலையேற்பட்டுள்ளது.

இதனிடையே இனிவரும் ஆளுனர் ஆட்சியில் அனைத்தையும் அடைவோமென தற்போது ஆளுநருக்கு முகவராக செயற்படும் சுந்தரம் டிவகலாலா என்பவர் அறிவித்துமுள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் மற்றும் அவரது மனைவியின் சுற்றுலாவிற்கு 45இலட்சம் வடமாகாணசபை நிதி எவ்வாறு அள்ளிவீசப்படுகின்றதெனவும் வி;ந்தன் கனகரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக ஆளுநர் தனது மகன்,தனிப்பட்ட உதவியாளர்களென பெருங்கும்பலாக லண்டன் மற்றும் ஜரோப்பிய நாடுகளிற்கு பயணம் செய்ய முற்பட்டிருந்த போதும் அது மைத்திரியால் தடுக்கப்பட்டதாக தாம் அறிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments