Header Ads

test

தொடர்கின்றது இரண்டாவது நாளாக போராட்டம்!


அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரினது உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆர ம்பித்துள்ளனர்.


குறித்த அரசியல் கைதி கள் 8 பேரும், தண்டனை தீர்ப்பு வழங்கப்படாமல் 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்குறித்த அரசியல் கைதிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதமையை கண்டித்து குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

மேலும் தமது விடுதலை குறித்து போதிய அக்கறை இன்றி செயற்படும் பிரதிநிதிகள் தமது விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தம்மை விடுவிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தமக்கு அரசிடம் இருந்து சரியாக பதில் வரும் வரை தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

No comments