Header Ads

test

நூலகத்திற்கு வர்ணமே பூசப்பட்டுள்ளது:மாவை!

ஜக்கிய தேசியக்கட்சி அரசினால் எரியூட்டப்பட்ட யாழ்.பொதுநாலகத்திற்கு தற்போது வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது. ஆனாலும் அதனூடாக வரலாற்றை மறந்துவிட முடியாதென மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு இந்தியா செய்ததும், செய்து வருகின்றதுமான உதவிகள் உதவிகள் அளப்பரியவை. அதனை நாங்கள் மறக்கவில்லை. அதற்காக நன்றிகளையே கூறுகின்றோம். அதே நேரம் தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டுமென்று கேட்கின்றோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு, இன்று (18) 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், யாழ்ப்பாண நூலகம் ஆசியாவின் சொத்தாக இருந்தது. ஆனால், அது கடந்த 1981ஆம் ஆண்டு எரிக்கப்பட்டதெனவும் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த நாளாக அந்த நாள் மாறியதெனவும் தெரிவித்தார்.

அவ்வாறு நூலகம் எரிக்கப்பட்டதால் அங்கிருந்த நூல்கள் அனைத்தும் எரிந்ததுடன் நூலகமும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், ஆனால் அதற்கு தற்போது வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது. ஆனாலும் அதனூடாக வரலாற்றை மறந்துவிட முடியாதெனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் கல்வி உச்ச நிலையில் இருந்த போது அந்தக் கல்வியை அழித்துவிடுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே நூலக எரிப்பு ஆகுமெனவும் அவ்வாறு தொன்னூறாயிரம் நூல்களைக் கொண்ட நூலகம் எரிக்கப்பட்டிருக்கின்ற போது, அது இலகுவாக கட்டியெழுப்பக் கூடியதல்லவெனவும் அவர் கூறினார்.

அதற்காக புத்தகங்களை வழங்கும் இந்தியாவின் இத்தகைய உதவிகள் மிகப் பெரியவையெனத் தெரிவித்த அவர், இதனை கொண்டு வந்து கையளிக்கின்ற அமைச்சருக்கும் தமிழக அரசாங்கத்துக்கும் நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்ளுகின்றோமமெனவும் குறிப்பிட்டார்.

No comments