Header Ads

test

மீண்டும் தொடங்கியது அரசியல் கைதிகள் போராட்டம்!


அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மர் இன்று வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்;துள்ளனர். 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோர் உட்பட எட்டு அரசியல் கைதிகள் மீண்டும் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர்.

முன்னரும் அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் இவர்கள் குதித்திருந்தபோது அவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதாக உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்ட வகையில் அரசியல் கைதிகளது விசாரணைகளை ஈழுத்தடித்துவருகின்ற நிலையில் மீண்டும் அவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

இதனிடையே தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று வரை யாரும் எம்மை வந்து பார்த்ததாகவோ, எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவோ இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வுக்கு கொழும்புக்கு வந்து செல்கின்றனர் அவர்கள் மகசின் அனுராதபுரம் சிறைச்சாலைகளை கடந்தே கொழும்புக்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் கூட எம்மை வந்து பார்க்கவில்லை, எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு முயற்சிக்கவில்லை.

இதனால் சிறைச்சாலை நிர்வாகமும் எம்மை கண்டுகொள்வதாக இல்லை, எம்மீது கரிசனை கொள்ளாமல் மதிப்பில்லாமல் நடத்துகிறார்கள். அத்துடன் 25 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கு எம்மை பற்றி கதைப்பதற்கு எமது பிரதிநிதிகள் தயாராக இல்லை. வாக்கு தேவைக்கு மட்டும் எம்மை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்று சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments