அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு அரசியல் கைதிகளது உடல்நிலை பாதிக்கபட்டுள்ள நிலையில் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்றிரவு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இருவர் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் இப்போது மேலுமிருவர் சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உடல் நிலை முற்றிலும் செயலிழந்த நிலையில் ராசபல்லவன் தபோரூபன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் தற்போது தங்கவேல் நிமலன் மற்றும் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் ஆகியோரும் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து அனுராதபுரம் பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 09 வருடங்களாக எந்தவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்குகளை மேற்கொண்டு விடுதலை செய்வது தொடர்பில் எந்த ஏற்பாகளும் இல்லை. இதுநாள் வரை உறவுகளை பிரிந்து உடல் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகி தமது வாழ்வை அநியாயமாக இழந்தவண்ணம் உள்ளமை தெரிந்ததே.
0 கருத்துகள்:
Post a Comment