Header Ads

test

அமல் கருணாசேகர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.




இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர். மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமல் கருணாசேகர, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டார்.

ஓய்வுபெற் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, சுகயீனம் காரணமாக இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஓய்வுபெற் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டுகாலகட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்திருந்தார்.

இதற்கமைய அவர் மீண்டும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஊடகவியலாளர் கீத் நோயர் தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து கீத் நோயார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியிருந்தார்.

“த நேசன்” பத்திரிகையின் இணை ஆசிரியரான கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments