Video Of Day

Breaking News

மாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்!

கடந்த 8ம் திகதியன்று அராலி கிழக்கு அம்மன்  கோயில்  பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது  தொடர்பான விசேட கலந்துரையாடல் மேற்படி  இடத்தில் நடைபெற்றது

இதில் பாராளுமன்ற /மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலர் /பொலிஸ்  உயர் அதிகாரிகள்/அதிகாரிகள்/ பொதுமக்கள் கலந்துகொண்டு பொலிஸாருடன்  இணைந்து  அப்பிரதேச இளைஞர்களும்    இரவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதென தீர்மானம் மேற்கொண்டு  இன்றுவரைக்கும் பொலிசுடன் இணைந்து பாதுகாப்பு   கடமையில்  ஈடுபட்டு  வருகின்றனர்

ஆனால் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாசன் தினக்குரல்  பத்திரிகைக்கு  வழங்கிய செவ்வியில் குறிப்பிடப்பட்ட   விடயமானது ,ஊதியமின்றி நித்திரை இன்றி பாதுகாப்பு கடமையில்   ஈடுபடும் இளைஞர்களின் தியாகத்தை  உதாசீ னப்படுத்தும் வகையில்   அமைந்துள்ளதென  அராலி பிரதேச மக்கள் விசனம்  தெரிவித்துள்ளனர் 

No comments