அச்சுவேலியில் வாள்வெட்டுக் குழுவால் தனியார் பேருந்து அடித்து நொருக்கப்பட்டது!
அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி - யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர்.
இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.

Post a Comment