Header Ads

test

நல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி?


நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்காட்சி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

புலம்பெயர் தேசத்தில் ஏட்டிக்குப்போட்டியாக கடைவிரித்துள்ள தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் இம்முறை நல்லூரிலும் கடைவிதித்துள்ளன.
இந்நிலையில் குறித்த தொலைக்காட்சி நிறுவனமொன்றே படையினரிடமிருந்து பெரிய தொலைக்காட்சியொன்றை வாடகைக்கமர்த்தி அதனை நல்லூர் முன்றலில் பொருத்தியுள்ளது.

இராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்ட குறித்த தொலைக்காட்சியை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் சிவில் உடையில் வந்து பொருத்தி சென்றிருந்தனர்.

நேற்று 16ஆம் திகதி முதல் ஆலய சூழலில் வீதி தடைகள் போடப்பட்டு வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், இராணுவ வாகனம் உள்ளே வந்ததுடன் அது தொலைக்காட்சியை பொருத்திச்சென்றுள்ளது.

எனினும் குறித்த தொலைக்காட்சியில் படையினரது நல்லிணக்க நிகழ்வுகளா அல்லது குறித்த புலம்பெயர் தொலைக்காட்சி நிறுவன அலைவரிசையா ஒளிபரப்பாகுமென்பது தெரியவரவில்லை.

No comments