கிளிநொச்சியில், பழைய கிளிநொச்சி மாவட்டச் செயலக அமைந்துள்ள காணியில் வடமாகாண காணித் திணைக்களத்துக்கான கட்டட நிர்மாணப்பணிகளை முன்னெடுக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
வடமாகாணசபைக்கு சொந்தமான காணிகள் பல ஏக்கரில் காணப்பட்ட போதும், அங்கு மாகாண திணைக்களத்தை அமைப்பதற்கு ஒரு துண்டு காணியை கூட வழங்க இதுவரை யாரும் முன்வரவில்லையென, மாகாண காணி ஆணையாளர் சி.குகநாதன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அமைந்துள்ள காணி கூட, மாகாண காணித் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியெனவும் மாகாண காணித் திணைக்களத்துக்குச் சொந்தமான முப்பது ஏக்கர் வரையான காணிகள் இவ்வாறு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என பிரித்து பார்க்காமல் எமது திணைக்களத்துக்குக் காணியை ஒதுக்கி தரவேண்டுமெனவும் அவர் கோரியிருந்தார்;. அத்துடன், பழைய கிளிநொச்சி மாவட்டச் செயலக அமைந்துள்ள காணியும் மேலதிக மாவட்டச் செயலாளரினது விடுதி அமைந்துள்ள காணியும் மாகாணக் காணித் திணைக்களத்துக்குச் சொந்தமானதெனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு எமது காணிகள் எந்தவித அனுமதிகளும் இன்றி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
0 கருத்துகள்:
Post a comment