Video Of Day

Breaking News

என்னையும் கொல்லுங்கள்:தமிழ் தாயின் கதறல்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை திருப்பி தந்துவிடுமாறு கோரி தாய் ஒருவர் கதறியழுத சம்பவம் ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன், தனது பிள்ளையை தர முடியாவிட்டால் தன்னையும் கொலை செய்து விடுமாறு அந்த தாய் கோரியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பபட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காலை 10.30 மணியளவில் கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தின் முன்றலில் ஆரம்பமாகிய இந்த போராட்டம் 1.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.
இதன்போது, “30 வடருக்கால யுத்தத்தால் காணமால் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் வெளிப்படுத்தவில்லை, பொய் வாக்குறதிகளை தந்து அரசாங்கம் எம்மை ஏற்மாற்றுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கென கொண்டுவந்த ஆணைக்குழு பொய்யானது, அரசாங்கம் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றது” என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய் ஒருவர், “காணாமலாக்கப்பட்ட பிள்ளையைத் திரும்ப தருமாறும், இல்லையேல் என்னையும் கொன்று விடுமாறு கூறி கதறியழுதுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

No comments