Header Ads

test

திருமலையில் சிறுமி மீது பாலியல் துஸ்பியோகம்! காவல்துறை உத்தியோகத்தர் கைது!

திருகோணமலை உப்புவெளி காவல்நிலையப் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்குவரத்து பிரிவு காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயது நிரம்பிய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது ஆடையற்ற புகைப்படத்தை காட்டி இந்த ஆண்டு 03ம் மாதத்தில் இருந்து தன்னை அந்த உத்தியோகத்தர் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்ததாக அச்சிறுமி காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரும் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமியும் அயல் வீடுகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்படத்தக்கது. 

No comments