மஹிந்த,கோத்தா தொடராக கைது?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து நடத்தப்பட்ட வழக்கு விசாரனைகள் பூர்த்தியடைந்துள்ளதாக
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபகச தொடர்பான ஊழல் மோசடிகளை விசாரனை செய்வதற்கு உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் 18 வழக்குகள் விசாரிக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ளன. ஆகவே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான காலம் நெருங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.அத்துடன் மஹிந்த மீதும் பல ஊழல் மோசடிகள், அதிகார துஸ்பிரயோங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தினால் இந்த வழக்குகளை துரிதமாகவும் இரகசியமாகவும் விசாரணை செய்து முவுறுத்த முடிந்தது என்றும் மைத்திரி- ரணில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் ஒருபோதும் பின் நிற்காது எனவும் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் உயர் பதவி வகித்த பலர் கைது செய்யப்படலாம் என்றும் மஹிந்த ராஜபக்ச, கோட்டபய ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, இந்தப் 18 வழக்குகளும் ஊழல் மோசடிகளுடன் மாத்திரமே சம்பந்தப்பட்டது எனவும், ஆனால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எந்தவொரு விடயங்கள் குறித்தும் விசாரனை இடம்பெறவில்லை என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Post a Comment