வடக்கில் வெற்றிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படுகின்றது?
வடக்கில்வேலை வாய்ப்புக்களை வழங்கும் சந்தர்ப்பம் இருந்தும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வடக்கு மாகாணசபை தவறியுள்ளமை வடக்கு மாகாணசபையின் செயற்றிறன் அற்ற செயற்பாடாக கருதமுடியாதென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எமது வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்கள் தான் இவ்வாறான குற்றங்களை முன் வைத்துவருகின்றனர். அடுத்த தேர்தலுக்கான முனகல்கள் இவை. முன்பும் வெற்றிடங்கள் இருந்தன. எவரும் கேட்கவில்லை. திடீரென்று பதவி முடியும் காலத்தில் இவறறை எழுப்பக் காரணம் அறிவார்கள்.
வேலை வாய்ப்புக்களை வழங்க இருக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது தவறான கருத்து. நாம் காலத்துக்குக் காலம் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை எடுத்தே வருகின்றோம். அதில் பல சிக்கல்கள்,தடைகள் எமக்கிருக்கின்றன.
நாங்கள் இன்னமும் பதின்மூன்றாவதுதிருத்தச்சட்டத்தின் கீழ்த்தான் பதவி வகித்து வருகின்றோம். நேற்றைய தினந்தான் சுகாதாரத் தொண்டர்கள் பலர் வந்து என்னைச் சந்தித்தார்கள். அவர்களுள் பலர் அடிப்படைக் கல்வித்தகைமை அற்றவர்கள். ஆனால் பல வருடகாலம் தொண்டர்களாகத் தொழில் புரிந்துவருபவர்கள். வெற்றிடங்களை வெளியில் இருந்துகல்வித் தகைமை பெற்றவர்களைக் கொண்டு நிரப்பலாம். அப்போது சுகாதாரத் தொண்டர்கள் பலர் தெருவிற்குச் செல்லவேண்டி வரும். தற்போதுஎ மது புள்ளி விபரங்கள் அவர்கள் செய்யும் வேலைகளையும் வெற்றிடங்களாகவே காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தொண்டர்களாகக் கடமையாற்றுகின்றார்கள். அவர்களை வேலைகளில் ஈடுபடுத்த பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றது. அவர்களின் கல்வித் தகைமையை,வயதெல்லையைத் தாண்டிய அவர்களின் வயது என்று பலவற்றை நாம் தாண்டியே அவர்களுக்கு நியமனங்கள் அளிக்கவேண்டிவரும்.
தொண்டர் ஆசிரியர்கள் பலர் தமது தொடர்ந்த சேவையினை நிரூபிக்க முடியாத நிலையில் நியமனம் பெறமுடியாதவர்களாக இருந்தார்கள். பதிவுப் புத்தகம் காணாமல் போனமையே அதற்குக் காரணம். அவர்களிடமிருந்து சில நிபந்தனைகளுக்கு அமைவாக சத்தியப் பத்திரங்கள் பெற்று நியமனங்களை வழங்கலாம் என்று நானே சிபார்சு செய்து அண்மையில் பல இடர்பாடுகளுக்குப் பின்னர் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. எத்தனை சத்தியாக்கிரகங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,சண்டை,சச்சரவுகள் என்பவற்றைத் தாண்டி அவர்கள் தமது நியமனங்களைப் பெற்றார்கள் என்று அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுள் நியமனம் பெற்ற ஒருவர் வந்து“உங்கள் செயற்றிறனால்த்தான் எமக்குநியமனம் கிடைத்தது”என்று என்னிடம் கூறும் போது கண்ணீர் வடித்தார்.
அதே நபர் சென்ற வருட இறுதியில் என் அலுவலக அறையில் கத்திக் கூப்பாடுபோட்டு தர்க்கித்தவர். ஆனால் அவரின் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. அனுதாபமும் அன்பு மேமேலோங்கியிருந்தது. அதை அவர் புரிந்து கொண்டிருந்ததால்த்தான் வேலை கிடைத்ததும் கண்ணீர் உகுத்தார். நாங்கள் செயற்றிறனுடன் தான் செயற்படுகின்றோம். வெளியில் இருந்துகுற்றம் சுமத்துவது இலகுவானதென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment