Video Of Day

Breaking News

காரைநகரில் மாணவன் நீரில் மூழ்கி பலி


ஊர்காவற்துறை, காரைநகர் பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காரைநகர் பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர் சிவகாமி அம்மான் கோவில் பிரதேசத்தைச் ​சேர்ந்த ​15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாழலயில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments