Video Of Day

Breaking News

தமிழக மீனவர்கள் 27 பேர் கைது


எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவுக்கு தென் கிழக்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 27 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் நான்கு நாட்டுபடகுகளை பறிமுதல் செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரனை செய்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கூறல்மீன்கள் அதிகளவில் இந்த பகுதியில் இருந்ததால் அதனை பிடித்து கொண்டிருந்த போது, காற்றின் வேகம் காரணமாக எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரனைக்கு பின்னர் இன்று அனைவரையும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்ககபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments