Video Of Day

Breaking News

தனியார் கல்வி நிலையங்களுக்குத் தடை


ஞாயிற்றுக் கிழமை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியே வகுப்புக்களை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட உள்ளதாக புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரை மற்றும் போயா தினங்களில் தனியார் பிரத்தியே வகுப்புக்களை தடை செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து மதங்களினதும் வேண்டுகோள் படி அந்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இதனைக் கூறினார்.

No comments