இலங்கை முஸ்லீம்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறனர் ?
எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இம்ராசா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்று விட்டனர். தற்போது முஸ்லிம்களிடமே ஆயுதம் இருக்கின்றது.
ஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏனைய இரு இனத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறினார்.
ஆகவே சவூதி, பாகிஸ்தான் நாடுகளின் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படாது அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் சிங்கள மக்களே. ஆனால் அதன்போது முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டார்கள்.
இது எங்களுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது. இப்போது எமக்கு நாட்டுப்பற்று இருக்கின்றது. நாம் இலங்கையர் என்ற வகையிலேயே இப்போது செயற்படுகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் அரசாங்கமே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்த்துவிட்டது என்றும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அவர் கூறினார்.
Post a Comment