Header Ads

test

மைத்திரி கூட்டம் நல்லது என்கிறார் சம்பந்தன்! மக்கள் தீர்மானிப்பர் என்கிறார் விக்கி!


கொழும்பில் நடைபெற்ற வடகிழக்கிற்கான ஜனாதிபதி செயலணி கூட்டம் பிரயோசனமாக இருந்ததாக கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மகாவலி எல் வலயத்தில் சிங்கள குடியேற்றமேதும் நடந்திருக்கவில்லையென மைத்திரி வாதிட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ வெறுமனே வாதிட முடியாது பின்வரிசையில் இருந்துள்ளனர்.

நல்லிணக்கம் பேசி வந்த டக்ளசுடன் சரிசமமாக பின்வரிசையில் இருந்து வேடிக்கை பார்த்து கூட்டமைப்பினர் திரும்பியுள்ளனர்.நாளை நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் மூக்குடையவேண்டியிருக்குமென தமக்குள் வாதிட்டுக்கொண்டு மைத்திரியிடம் பே அவரோ தனது அதிகாரிகளுடன் பேசிவிட்டு அப்படியில்லையே என பதிலளித்துள்ளார்.

இதனிடையே நாளை போராட்டத்திற்கு முதலமைச்சர் தனது ஆதரவை வெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையில்,தங்களுடைய பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கு,கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இன மக்களால் கபளீகரம் செய்யப்படுவதனை எமது தமிழ் மக்கள் அச்சத்துடனேயே நோக்கி வந்துள்ளார்கள். தமது இருப்பைத்தொடர்ந்தும் தக்கவைக்க முடியுமா என்ற அச்சம் தமிழ் மக்கள் மனதிலே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளது.கல்ஓயா திட்டத்தின் மூலம் கிழக்குமாகாணத்தில் தமிழர்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு இனப்பரம்பல் மாற்றியமையக்கப்பட்டமை முதலில் அச்சத்தை உதயமாக்கியது. அதன் பின் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் தற்போது வடமாகாணத்திலும் நடைபெறும் அபகரிப்புக்கள் அச்சத்தை உச்சமாக்கியுள்ளது. இதனடிப்படையிலேதான் தமிழ் அரசியல் தலைவர்கள் அரச அனுசரணையுடன் நடைபெறுகின்ற பெரும்பான்மையின குடியேற்றங்களை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றார்கள். அரசாங்கத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கைகள் யாவும் வடக்குகிழக்கை எமது பாரம்பரியதாயகமாக ஏற்றுக் கொண்டுள்ளன. 

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகளில் மொழி உரிமையுடன் அச்சமின்றி வாழக்கூடியதமது இருப்புக்களை உறுதிப்படுத்திகொள்வது எமது முக்கியமான அரசியற் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. 1957ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்திலும், 1965ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டட்லி சேனநாயக்க- செல்வநாயகம் ஒப்பந்தத்தின் போதும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்ற பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதனைத் தவிர்க்க வரைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டன. உதாரணமாக,

1. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்யும் போது அந்தந்த மாவட்டங்களில் வாழும்மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
2. அதற்கு மேலும் குடியேற்றவாசிகள் தேவைப்படும் இடத்து அந்தந்த மாகாணங்களில் வாழும்த மிழ்ப்பேசும் மக்கள் உள்வாங்கப்படவேண்டும். 
3. அதற்கு மேலும் குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்யும் போது வடக்குகிழக்கு மாகாணங்களிற்கு வெளியே வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பது போன்ற ஏற்பாடுகள் மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன.
மேற் கூறிய 02 ஒப்பந்தங்களும் சிங்களத் தலைவர்களால் ஒருதலைப்பட்சமாக கைவிடப்பட்டமையால் இந்தப் பிரச்சனைதொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கின்றது.
ஆரச ஆதரவிலான குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ளும் போது இலங்கையின் மொத்தக் குடிப்பரம்பலில் 12மூஐமட்டும் தமதாக்கிக் கொண்டுள்ள தமிழ் பேசும் மக்கள் அவர்கள் செறிந்து வாழும்பகுதிகளில் ஏனைய மொழிபேசுகின்ற மக்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகள் அவர்கள் வாழுகின்ற பிரதேசத்திலேயே இல்லாமல் ஆக்கப்படுகின்றன.வடக்குகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினர். சரித்திரத்திற்கு முற்பட்டகாலம் தொடக்கம் தமிழ்மக்களே இவ் விருமாகாணங்கள் தற்போது இருக்கும் இடங்களில் பெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளார்கள். 

இன்று இலங்கையில் காடுகளில் வசிக்கும்பறவை இனங்களுக்கும்,மிருகங்களுக்கும்தனித்தனியாகசரணாலயங்கள் அமைக்கப்பட்டுஅவற்றின் வாழும் முறைமைகள் குழப்பமடையாதவிதத்தில் அவைதமது இயல்பானமுறையிலேயேவாழ்வதற்குரியஒழுங்குகள் செய்யப்பட்டுவருவதுமட்டுமன்றிசரணாலயங்களுக்கு அருகே மிகைஒலிகளை எழுப்புவது கூட சட்டத்திற்குமுரணானது என்று பலசட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பௌத்தமதம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும்  மதமாகும்.

ஆனால் இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்ப் பேசும்மக்களின் இருப்பை உறுதிசெய்து அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டு அவர்களை ஐக்கிய இலங்கைக்குள் சுயமாக வாழும் ஒருபிரிவினராக ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல்  முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாதது விந்தைக்குரியது.அதற்குமாறாக அவர்களின் பூர்வீகப் பகுதிகளைப் பறித்தெடுப்பதற்கே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முயன்றுள்ளன. 
இதனால்த்தான் 1987ம் ஆண்டுஇலங்கை இந்தியஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் வரையப்பட்டு காணிசம்பந்தமான பல கலந்துரையாடல்கள் அப்போதையதமிழ்த் தலைவர்களால் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைசட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் கிழக்குமாகாணத்தில் புவலயம் வரைகுடியேற்றப்பட்டபோது அதில் தமிழ் முஸ்லீம் மக்கள் அற்பதொகையினரே பயனாளிகளாகசேர்க்கப்பட்டனர். இந்தநடவடிக்கைஇனப்பரம்பலில் பாரியமாற்றத்தைஏற்படு த்தியது. அதனைக் கருத்தில் கொண்டுமகாவலிஅபிவிருத்தித் திட்டம் போன்றமாகாணங்களுக்கிடையிலானபாரியதிட்டங்களில் முழுஇலங்கையின் இனவிகிதாசாரஅடிப்படையில் குடியேற்றவாசிகள் தெரிவுசெய்யப்படவேண்டும் எனஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும்பு வலயம் வரைகுடியேற்றப்பட்டகுடியேற்றவாசிகளில்அற்பதொகையினரேதமிழ் முஸ்லீம் இனங்களைச் சேர்ந்தவராக இருந்தார்கள். இனவிகிதாசாரத்தின்படிஅவர்களுக்குகிடைக்கவேண்டியதொகையைஎதிர்வரும் திட்டங்களில் ஈடுசெய்யவேண்டும் என்றமுன்மொழிவுஅப்போதையமகாவலிஅபிவிருத்தி அமைச்சர் காமினிதிஸாநாயக்க அவர்களால் முன்மொழியப்பட்டது. 

அதாவதுசிறுபான்மையினர்கள் தங்களுக்குரியபங்கைப் பெற்றுக்கொள்ளும் வரைஏற்கனவேதமதுவிகிதாசாரத்திற்குமேலதிகமாககாணிகளைப் பெற்றுக் கொண்டபெரும்பான்மையினருக்குகாணிவழங்குவதுநிறுத்தப்படவேண்டும் என்றும் காணிகள் வழங்கப்படாததமிழ் முஸ்லீம் இன மக்களுக்குகாணிகள் வழங்கப்படவேண்டும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கிழக்குமாகாணத்தில் ர் வலயத்தில் வழங்கப்படவிருந்தகாணிகளில் மிகப் பெரும்பாலானபங்குதமிழ் முஸ்லீம்மக்களுக்குவழங்கப்படும் எனஉத்தரவாதமும் வழங்கப்பட்டது.
இம் முன்மொழிவுஏற்றுக் கொள்ளப்பட்டுஅதற்கமையபத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பத்திரத்தின் அடிப்படையிலேயே 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில் காணிசம்பந்தமானசரத்துக்கள் சேர்க்கப்பட்டன.காணிகளைவழங்கும் போதுதேசிய இன விகிதாசாரம் பேணப்படவேண்டும் என்றும்எனினும்குறிப்பிட்டதிட்டத்தால் இடம்பெயர்ந்தமக்களுக்குமுன்னுரிமைவழங்கவேண்டும் என்றும் அம் மாவட்டத்தில் உள்ளகாணிஅற்றவர்களுக்குகாணிகளைவழங்கிஅதற்குமேலதிகமாகஉள்ளகாணிகளைஅந்தமாகாணத்தில் உள்ளமக்களுக்குவழங்கவேண்டும் என்றும் தெளிவாகஅரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.உண்மையில்வடக்குகிழக்குமாகாணங்களில் தேசிய இன விகிதாசாரத்துக்குப் பதில் மாகாணவிகிதாசாரமேபேணப்படவேண்டும். ஆனால் அதுகூடப் பேணப்படாமல் பெரும்பான்மையினரைக் குடியேற்றிவருவதேஎமக்குப் பெருத்தஏமாற்றத்தைஅளிக்கின்றது. 
இதுவரைவழங்கப்பட்டுள்ளகாணிகளில் தங்களுக்குகிடைக்கவேண்டிய இனவிகிதாசாரப்படியானகாணிகள் கிடைக்காததால்புதியதிட்டங்களில் அவர்களுக்குரியபங்குகள் வழங்கப்படவேண்டும். அப்படிவழங்கப்படாதகாணித் துண்டுகளைவழங்குவதற்குஒருகாலநிர்ணயம் நிர்ணயிக்கப்படவேண்டும். இப்படியானகுடியேற்றங்கள் செய்யும் போதுஅந்தமாகாணத்தின் இனப்பரம்பலைமாற்றாதவகையில் குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இவை எல்லாம் அரசியல் அமைப்பில் ஏற்கனவேஇருக்கும்ஏற்பாடுகள். எனினும் இவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவடக்குமாகாணத்தின் எல்லைப் பகுதியில்டு வலயம் என்றபெயரில்பெரும்பான்மையினமக்களின் குடியேற்றத்தைதமிழ் மக்களின் பலத்தஆதரவுடன் கொண்டுவரப்பட்டஇந்தஅரசுமிகத் தீவிரமாகமேற்கொண்டுவருவதுகவலைஅளிக்கின்றது. 

தற்பொழுதுஅவ்வாறானசிங்களகுடியேற்றங்கள்நடைபெறவில்லைஎன்றுஅரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் அவ்வாறு குடியேற்றங்கள் நடைபெற்றதற்கானஆதாரங்கள் எங்களிடம் உண்டு. உதாரணத்திற்கு றுக்மல் து~hரலிவேரா என்பவருக்கு கருநாட்டுக்கேணியில் டு வலயத்தில் ஒரு ஏக்கர் காணிகொடுக்கப்பட்டதற்கு அத்தாட்சி தற்போது என் கைவசம் உண்டு. அதனை  இதனுடன் இணைத்துஅனுப்புகின்றேன்.

வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் பாரம்பரியமாக இருக்கின்றதமிழ் மக்களின் உறவைத் துண்டித்து வடக்கு வேறு கிழக்குவேறு என்று பிரித்தாழும் தந்திரத்தின்உத்தியாகவே இவ்வாறான குடியேற்றங்களை அரசுமேற்கொள்கின்றது என்று நாங்கள் கருதுகின்றோம். 
இத்திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.அரசியல் அமைப்புத்திட்டத்தில் கூறப்பட்டவகையில் மகாவலிஅபிவிருத்திதிட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களுக்குகிடைக்கவேண்டியபங்கைடு வலயத்திலும் எதிர்காலத்திட்டங்களிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.குடியேற்றவாசிகளைத் தெரிவுசெய்யும் போதுமாகாணசபையின் ஆலோசனையும் பெறப்படவேண்டும் என்றுஅரசியல் அமைப்புத் திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் எமக்குத் தெரியாதவகையிலேயேகுடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதுகண்டிக்கப்படக் கூடியதும் அனுமதிக்கமுடியாததுமாகும். இந்தஐனநாயகவிரோத இனப்பரம்பலின் விகிதாசாரத்தைமாற்றியமைக்கும்நடவடிக்கையையும்எமக்குகிடைக்கவேண்டியபங்கைத்தராது. 

மேலும் தமிழ்ப் பகுதிகளில் நூறு வீதம் சிங்களமக்களுக்குகாணிகளைவழங்குவதையும் நாங்கள் கடுமையாகஎதிர்க்கின்றோம். அதற்காகஇன்றுமுல்லைத்தீவில் நடைபெறுகின்றமக்கள் போராட்டத்தைநாங்கள் முற்றிலும் ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்துமகாவலி நீர் எமக்கு வேண்டுமா வேண்டாமா என்பதுபற்றியும் மகாவலி அதிகாரசபையின் செயற்பாட்டை வடகிழக்குமாகாணங்களில் முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பதுபற்றியும் எமது மக்கள் வருங்காலத்தில் தீர்மானிப்பார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments