இனஅழிப்பு இராணுவத்திற்கு அழைப்பாம்?
அவுஸ்திரேலிய பாதுகாப்பு மாநாட்டில் தலைமையுரை ஆற்ற தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லுதினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த 7 வருடத்தில் எவ்வாறான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வல்லமை இலங்கை கொண்டதாக இலங்கை இராணுவம் மாறியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு மாநாடு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டின் மூலம் இலங்கைக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் புகழ் கிடைக்குமென்றும், இந்து - பசுபிக் வலய நாடுகளின் இராணுவ பிரதானிகள் முன்னிலையில் உரையாற்றும் சந்தர்ப்பம் தமக்கு கிடைத்துள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment