இன அழிப்பு இலங்கை இராணுவத்திற்கு சுமார் 600 கோடி (39 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நொயட், இந்து சமுத்திர வலய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி வெளிநாடுகளின் இராணுவ சேவைக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நிதி வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமெரிக்க காங்கிரஸ் வழங்கியுள்ளது.
காங்கிரஸின் அனுமதியின் பின்னரே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது பற்றி தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment