Header Ads

test

போத்தல் சண்டை! காயமடைந்த மூன்று இராணுவத்தினர் மருத்துவ மனையில் அனுமதி!

சிறிலங்கா இராணுவத்தினர் இடையே நடைபெற்ற போத்தல் சண்டையில் 3 இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பியத்தலாவை இராணுவ முகாமில் இடம்பெற்றது.

முகாமில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் வீணை வாசிக்க மற்றொரு இராணுவத்தினர் ஒருவர் அதனை நிறுத்துமாறு கூறவே அது வாய்த்தர்க்கமாக மாறி இறுதியில் போத்தல் சண்டையாக மாறியது.  இச்சண்டையில் இருவரும் காயமடைந்தனர். இச்சண்டையில் விலக்கு பிடிக்கச் சென்ற மற்றொரு இராணுவத்தினரும் காயத்திற்கு உள்ளானார்.

காயமடைந்த மூவரும் பியத்தலாவை அரச மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வருகின்றனர்.

No comments