Header Ads

header ad

வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச வேண்டாம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கடந்த 07.08.2018 அன்று சுவிஸ் நீதி அமைச்சரை திருகோணமலையில் வைத்து சந்தித்தனர். அச்சந்திப்பில் அவர்கள் கையளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

நீண்ட கால இழுபறிக்குப் பிறகு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் உள்ளடக்கம் உள்ளக முரண்பாடுகளைக் கொண்டமைத்துள்ளது. எம்மில் ஒருவரையும் ஆணையாளர்களுள் ஓருவராக உள்ளடக்கியிருந்தமையை நாம் கவனத்தில் கொள்கிறோம். அனால் இதுவும் ஒரு சடங்கு ரீதியாக செய்யப்பட்டுள்ளது என அஞ்சுகிறோம். நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறுதி கால யுத்தத்தின் போது இராணுவத்தின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளராக கடமையாற்றியவர்.

வடக்கு கிழக்கை சேர்ந்த காணமால் போனோர் பிரச்சனையில் செயற்பாட்டு அனுபவம் உள்ள எந்த சிவில் சமூகப் பிரதிநிதியும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்யில் உள்வாங்கப்படவில்லை என்பதும் வினோதமானது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்க்கு நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் கடந்த காலத்தில் சனாதிபதி சிறிசேனஃபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்க்காக பிரச்சாரம் செய்தவர். அவர் இந்த அரசாங்கத்தை சங்கடத்திற்குள் கொண்டு வரும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார். இவை எல்லாம் ஒரு புறம் வைத்து பார்த்தாலும் இன்று எமக்கு தேவை உறுதிமொழிகள் அல்ல நடவடிக்கைகளே என்பதே எமது நிலைப்பாடு.

அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான  அலுவலகம் வடக்கு கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி  வருகின்றனர்.  எங்களுக்கு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அனால் காணமால் போன உறவுகள் அமைப்பு ரீதியாக பல காலமாகவே செயற்பட்டு வருகிறோம். எமது கோரிக்கைகள் என்ன என்பதைப் பொது வெளியில் தெளிவாகவே முன் வைத்துள்ளோம். இப்பொழுது தேவை மேலதிக கூட்டங்கள் அல்ல. காத்திரமான நடவடிக்கைகளே. 

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் அரசாங்கத்தோடு நல்லுறவு பாராட்ட விரும்புவதற்காக எங்களை மீது எங்களை கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்குமாறு கேட்க முடியாது. ஒவ்வொரு முறையும் ஒரு ஆணைக்குழுவோ அல்லது அலுவலகமோ அமைக்கப்படும் போது அதன் முன் அழுது, மண்டியிட்டு முறையிட எங்களை எதிர்பார்க்க வேண்டாம். கடந்த காலங்களில் நாங்கள் போதுமானளவு அதனை செய்து விட்டோம். நல்லெண்ணத்தை காட்ட வேண்டிய சுமை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் மீதுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எம்மை சந்திக்க வரும் போது  நாங்கள் காத்திரமான ஒரு வேண்டுகோளை வைத்தோம். சனாதிபதி சிரியசேன தருவதாக வாக்குறுதி அளித்த பட்டியல்களை என பெற்றுத் தர முயற்சிக்காக கூடாது? இது வரை அதற்கு திருப்தி காரமான பதில் இல்லை.

அதிமேதகு அமைச்சர் அவர்களே,
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்திலிருந்து சர்வதேச சமூகம் இவர்களின் அரை குறை முயற்சிகளுக்கு ஆதரவு நல்கச் சொல்லி எங்களை கேட்டு வந்துள்ளனர். அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தம் இப்போது எங்கள் மீது செலுத்தப்ப்படுகிறது. தீர்வுகளை நோக்கி நாங்கள் வேலை செய்யத் தயார் என்பதை காட்டும் பொறுப்பு எங்கள் மீது சுமத்தப்படுகிறது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தகமை அற்றவர் போல் எங்கள் மீது பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல. யாருமே - அரசியல் கட்சியாக இருக்கலாம் அமைப்பாக இருக்கலாம் - வீதிக்கு இறங்கி போராடுமாறு எம்மை கோரவில்லை. அது எங்கள் முடிவு. நாங்களே எமது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் அனால் நாம் அவற்றை தீர்த்துக் கொள்வோம். அனால் எமக்கு என்ன தேவை என்பதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம். இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுக்களை அலுவலகங்களை நாம் நம்புவதாக இருந்தால் செயலில் மாற்றத்தை காட்ட சொல்லுங்கள். இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் இதை எடுத்துச் சொல்லுங்கள். 

No comments

Powered by Blogger.