கடுமையாக உருகுலைந்த நிலையிலிருந்த ஆணொருவரின் சடலமொன்று, திருகோணமலை, கன்னியா, காயத்திரி அம்மன் கோயில் வீதிக்குப் பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள்ளிருந்துமீட்கப்பட்டுள்ளது.
சடலத்தின் கழுத்துக்கும், மரத்துக்குமிடையில் மஞ்சள் நிறத்திலான நைலோன் நூலொன்றும் கட்டப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கன்னியா காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்குச் சென்றிருந்த நபரொருவர் சடலத்தைக் கண்டு, காவல்துறை அவசர அழைப்புஇலக்கத்துக்கு வழங்கிய தகவலையடுத்து, மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்துக்கு 10 மீற்றர் தூரத்திலிருந்து, பாதணிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்ட நபருடையதாகக் கூறப்படும், சேட், கைக்குட்டை, முஸ்லிம்கள் அணியக்கூடிய தொப்பியொன்றும், மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறையால் மீட்கப்பட்ட சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment