Header Ads

test

அரசியல்வாதி ஆளுநராக வந்ததால் குழப்பம்:வடக்கு முதலமைச்சர்!


பள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதியைக்(ரெஜினோல்ட் கூரே)  கொண்டு வந்தார்கள். அவரின் நடவடிக்கைகள் எங்களைக் நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ண முன்னிலையில் நிகழ்வொன்றில் இத்தகைய குற்றச்சாட்டை முதலமைச்சர் முன்வைத்திருந்தார்.அவர் மேலும் தனது உரையில் தன்னால்; அவருக்கு சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 20ந் திகதி அனுப்பப்பட்ட அமைச்சர் ஒருவர் பற்றிய தீர்மானம் இதுவரையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லையெனவும் பா.டெனீஸ்வரன் தொடர்பில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். 

நான் இலங்கை சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொள்வது நற்சேவை செய்து வருபவர்களை தயவு செய்து தொடர்ந்து இங்கு சேவை செய்யவிடுங்கள். தற்போதைய இங்கிருக்கும் அறுவைச்சிகிச்சை நிபுணர் நான் பதவிக்கு வந்த பின்னரே இங்கு வந்தார். ஆவரை மாற்றவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. இரண்டு வருடங்களின் பின்னர் வடக்கு,கிழக்கு வைத்தியர்களை மாற்றம் செய்யும் பழக்கம் இங்கு போர்க்காலத்தில் அமுலில் இருந்தது. தற்போது அவ்வாறான முறை இருக்கத்தேவையில்லை. தயவுசெய்து இது அமைச்சர் ராஜித உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகின்றேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  

No comments