Header Ads

test

சிங்கள மாணவர்களிற்கு உதவிய மாணவர் ஒன்றியம்!


வறுமையில் கல்வியை தொடர முடியாத சிங்கள மாணவர்களிற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் உதவிகளை தமிழ் தரப்புக்களிடமிருந்து பெற்று அவர்களது கல்வியை தொடர முன்னுதாரணமாக உதவியுள்ளது.

இது தொடர்பில் மாணவர் ஒன்றிய செயலாளர் மூன்றாமாண்டு கலைப்பிரிவில் கல்வி பயிலும் இரு தமிழ் மாணவிகளும் மற்றைய இரு சிங்கள மாணவர்களும் மிகவும் வறுமையின் கீழ் வாழ்ந்து வருவதை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் கல்வியில் முன்னேற்றம் கொண்ட மாணவர்களாக காணப்படுவதுடன் அவர்களுக்கு கல்விக்கு தேவையான செலவு தொகையினை அவர்களால் ஈடுசெய்ய முடியவில்லை என்பதை தெரியப்படுத்தியிருந்தார்.

இரு மாணவர்களும் பல்கலைக்கழக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பத்திரிகை விற்பனை செய்தும் இரவு நேரங்களிலும் விற்பனை நிலையங்களில் வேலை செய்தும் அதில் வரும் வருமானத்தினை கொண்டே தமது கல்வியை தொடர்கிறார்கள்.அத்துடன்; பரீட்சை நெருங்குகின்ற சமயத்திலும் அவர்கள் இவ்வாறு வேலை செய்வது மிகவும் வருந்தத்தக்க விடயம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து அவர்களிற்கான மாதாந்த கொடுப்பனவு தொகையினை வழங்குவதற்கு கனடா சிவன் அறக்கட்டளை நிதியம் முன்வந்துள்ளது. வழமையாக தமிழ் சிங்கள மாணவர்கள் பரஸ்பரம் மோதிக்கொள்கின்ற நிலையை கடந்து இரு தரப்பு மாணவர்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவது அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments