இலங்கை

சட்டத்தை தன்னிடம் வளைக்கும் மைத்திரி?

இனஅழிப்பு இராணுவத்தை பாதுகாக்க ஏதுவாக குற்றவாளிகளை ஒப்படைத்தல் மற்றும், சிறிலங்கா குடியுரிமை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்நாட்டு விவகார அமைச்சிடம் இருந்து நீக்கப்பட்டு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டின் 8 ஆவது இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை, பாதுகாப்பு அமைச்சரான தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் சிறிலங்கா அதிபர்.

அத்துடன், குற்றவாளிகளை ஒப்படைத்தல் மற்றும், சிறிலங்கா குடியுரிமை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்நாட்டு விவகார மற்றும் வயம்ப அபிவிருத்தி  அமைச்சர் எஸ்.பி.நாவின்னவிடம் இருந்து  நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு அரசிதழ் அறிவிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment