Video Of Day

Breaking News

9 ஆடுகளைக் கடித்துக் கொன்ற கட்டாக்காலி நாய்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் இன்று காலை கட்டாக்காலி நாய்கள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது.

கட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்று தனது இறையாக்கியுள்ளது. ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என்று  கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தனது  இரையாக்கியுள்ளமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது தொடர்பாக  காவல்துறையினரிடமும்  கால்நடை வைத்திய அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியதில் எந்த பயனும் கிடைக்கவில்லை என கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.







No comments