போதைப் பொள் பாவனையின் அதிகரிப்புக்கு இலங்கைப் பொலிஸாரும். இலங்கைப் படையினருமே பிரதான காரணம் என ஈபிஆர்எல்எப் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் படகுகள், கடல் எல்லையை மீறும்போது கண்டுபிடித்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தெரிந்த இலங்கை கடற்படையினருக்கு, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடல்மார்க்கமாக கடத்தப்பட்டு, தமிழர் தாயகப் பிரதேசங்களுக்குள் விநியோகிக்கப்படுகின்றமை தெரியாதா என்று கேள்வி எழுப்பிய சுரேஸ் பிரேமச்சந்திரன, இலங்கைப் படையினர் போதைப் பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இலட்சக்கணக்கான இலங்கைப் படையினர் முகாமிட்டுள்ள நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களில் எவ்வாறு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
0 Comments :
Post a Comment