Header Ads

test

யாருக்கு புனர்வாழ்வு:முதலமைச்சர் அழைப்பு!


விக்கி,விஜயகலா,சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் இரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளநிலையில் அவரை வடக்கிற்கு வருகை தருமாறு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பகிரங்க அழைப்புவிடுத்துள்ளார்.

உண்மையை உணர்ந்த பின்னரே அவரின் வார்த்தைகள் வெளி வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்கு புனர்வாழ்வளிக்கவேண்டுமா என்று முடிவெடுக்க இரஞ்சன் இராமநாயக்க அவர்களை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன். இராணுவ அதிகாரி இரத்தினப்பிரியபந்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும், சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்குஅதிகாரங்கள் இல்லை; எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லை, எமக்குமதிப்பில்லை; புறக்கணிக்கப்படுகின்றோம்; ஆக்கிரமிக்கப்படுகின்றோம். 

ஆகவே இரத்தினப்பிரிய பந்துபோல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்ககௌரவ இரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும். எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம். வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன்.

இங்கு வந்து இராணுவத்தினரிடமோ காவல்துறையிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக்கேட்பதில் பயன் இல்லை. பொது மக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும் என்று என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments