Header Ads

test

முல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்!


போராட்டத்தினை முன்னெடுக்கும் இடத்தை மாற்றியதனை போராட்டத்தை முடிவுறுத்தியதாக அர்த்தப்படுத்த கூடாதென முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் தமது போராட்டத்திற்கான நீதியான தீர்வு கிடைத்தப் பின்னரே, போராட்டம் முடிவுறுத்தப்படுமெனவும் அவர்கள்; தெரிவித்துள்ளனர்.
\
முல்லைத்தீவு மாவட்டத்தில், வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி, கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்புப் போராட்டமானது, கடந்த 18ஆம் திகதி 500 ஆவது நாளில் அந்த இடத்தில் முடிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 23ம் திகதி திங்கள் காலை 10 மணி முதல், மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில், தமக்கான அலுவலகத்தைத் திறந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முன்னர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் அச்சுறுத்தல்கள் இருந்தது. எனவே, அந்த இடத்தில் போராட்டத்தை நிறுத்தி, மாற்றுவழியில் போராட முடிவெடுத்தோம். அதன்விளைவாக, அலுவலகம் ஒன்றை அமைத்து அதில் இருந்து போராடுவதாக குடும்பங்கள் தெரிவித்துள்ளன. எமது போராட்டம் எமது உறவுகள் கிடைத்தாலே அன்றி, வேறு காரணங்களுக்காக நிறுத்தப்படாது. காலத்துக்கு காலம் வடிவங்களை மாற்றி போராடிக்கொண்டே இருப்போமென குடும்பங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

No comments