எலும்பு துண்டுக்கு அலையும் மனோகணேசன்!
எச்சில் இலைக்கும் எலும்புத் துண்டுக்கும் கத்தும் நாய்களைக் கருத்தில் எடுக்காதீர்களௌ தெரிவித்துள்ளார் மூத்த ஊடகவியலாளரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதியுமான ந.பொன்ராசா.
வடக்கு மக்களிடையே பிரபாகரனே எழுந்து வந்து மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என இலங்கையின் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்காக, அங்கு பொலிஸாரோ இராணுவமோ செல்ல வேண்டியும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஆரம்பத்தில் விஜயகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து வந்த அமைச்சர் மனோ கணேசன் தற்போது விஜயகலாவுக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்கள் முன் தெரிவித்து வருகின்றார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொன்ராசா எச்சில் இலைக்கும் எலும்புத் துண்டுக்கும் கத்தும் நாய்களைக் கருத்தில் எடுக்காதீர்களெ தெரிவித்துள்ளார்.
அண்மைக்கால இவ்வாறான புலி எதிர்ப்பு கருத்துக்களை முன்வைப்பதும் பின்னர் அவ்வாறு சொல்வவில்லையென பல்டியடிப்பதும் மனோகணேசனின் போக்காகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment