Header Ads

test

அமெரிக்காவின் அமைதிப் படை உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை


அமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் அமெரிக்காவின் அமைதிப் படையணியின் தொண்டர்கள் பணியில் ஈடுபடுவது  தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே, அவர்களுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்ட விதிக்களின் கீழ், அமெரிக்காவின்  அமைதிப்படையணி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இராஜதந்திர சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும், சுங்கத் தீர்வைகள் இன்றி தமது தேவைக்கான பொருட்களை கொண்டு வர அனுமதிக்கப்படுவர்.

குடிவரவு, குடியகல்வு  மற்றும் நுழைவிசைவுக் கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது.

No comments