இலங்கை

கொழும்பில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி இருவர் படுகாயம்


கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்ட வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

58 வயதுடைய செல்வையா செல்வராஜ் என்பவரும் 50 வயதுடைய எலிசபத் பெரேரா என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment