Header Ads

test

பங்காளிக் கட்சிகளை அவசரமாகச் சந்திக்கிறது டெலோ!


இலங்கைத் தமிழரசுக் கட்சியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு டெலோ தீர்மானித்துள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு நேற்று வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரமாளவில் இந்த சந்திப்பை நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக டெலோவின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முதலில் தமிழரசுக் கட்சியை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அடுத்த தேர்தல் என்பன குறித்தும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கலந்துரையாட டெலோ முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான கோரிக்கையை அன்றைய கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவும் டெலோ தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments