வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம் 500 வது நாளை தாண்டியிருக்கின்ற போதும் அதனை சர்வதேச மயப்படுத்தவோ அல்லது ஆகக்குறைந்தது கொழும்பிற்கோ கொண்டு செல்ல கூட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதனாலேயே கூட்டமைப்பினை தமது போராட்ட களத்திற்கு அழைப்பதில் ஆர்வமற்றிருப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் முல்லைத்தீவில் நடத்தி வரும் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நீண்ட இடைவெளியின் பின்னர் எட்டிப்பார்த்துள்ளார்.
இதனிடையே வடக்கில் மக்கள் மனங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் ஞாபகத்தை நீக்க வேண்டுமாயின் இராணுவத்தினர் வடக்கில் நிர்மாணித்துள்ள போர் வெற்றி சம்பந்தமான சகல நினைவு ஸ்தூபிகளும் அகற்றப்பட வேண்டும் என சிறீதரன் தெரிவித்துள்ளார். மக்கள், விடுதலைப் புலிகள் மறக்க வேண்டுமாயின் போர் வெற்றி தொடர்பான அனைத்து சின்னங்களும் அகற்றப்பட வேண்டும் என அவர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்ட களத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.
வன்னியினை கைப்பற்றிய போது அங்கிருக்கும் விடுதலைப்புலிகள் நினைவு சின்னங்கள் அனைத்தும் படையினரால் அழிக்கப்பட்டிருந்தது.அதே வேளை கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் படையினரது போர் வெற்றிச்சின்னங்கள் நிறுவப்பட்டு அரசால் பேணப்படுவது தெரிந்ததே.
0 Comments :
Post a Comment