Video Of Day

Breaking News

மரண தண்டனை விவகாரம்! வாக்குறுதியை மீறியது சிறீலங்கா! கேள்வி எழுப்ப தயாராகும் மனித உரிமைகள் ஆணைக்குழு

மரண தண்டனை நிறைவேற்ற இலங்கை முன்னெடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா.வின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் வினா எழுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனையை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் கடந்த 2015 செப்டம்பர் மாத மாநாட்டில் வாக்குறுதியளித்திருந்தது.

இதனால், எதிர்வரும் செப்டம்பர் மாநாட்டில் வாக்குறுதியை மீறியமை தொடர்பில் காரணம் முன்வைக்க இலங்கை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூக்குத் தண்டனை நிறைவேற்ற கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு சர்வதேச ரீதியிலுள்ள ஐந்து மனித உரிமைகள்அமைப்புக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments