இந்தியச் சிறுவர்கள் காங்கேசன்துறை கடலில் மீட்பு!
றெஜிபோமில் தயாரிக்கப்பட்ட சிறிய படகொன்றில் மிதந்து தத்தளித்த சிறுவர்கள் இருவர் காங்கேசன் துறைக் கடற்படையால் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் தூண்டிலுக்குச் சென்றபோது காற்றின் வேகத்தை எதி்ர்க்க முடியாது கடலில் தத்தளித்தோம் என்று கைதானவர்கள் விசாரணைகளில் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக் கடற்பரப்பில் வைத்து நேற்று மாலை 6 மணியளவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கடலில் தத்தளித்தார்கள், உணவின்றி பசியில் இருந்தார்கள் என்று கடற்படையினர் தெரிவி்த்தனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரும் காங்கேசன் துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Post a Comment