Header Ads

test

வடமராட்சி கிழக்கு:தொடரும் தெற்கு ஆக்கிரமிப்பு!



வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பிரதேசத்தில் கடல் அட்டை பிடிப்பவர்களை கண்டுகொள்ளாது விடும் உத்தியில் சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவு மாகாணசபை உறுப்பினர்களிற்கு அப்பால் மீனவ சமாசமும் கைநீட்டியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மீனவ சங்கங்களது தலைவர்கள் தெற்கு மீனவர்களிடம் கைநீட்டி பணம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கின் முதன்மை அமைப்பான மீனவ சமாசங்களது சம்மேளன தலைவர் உள்ளிட்டவர்களும் பணம்பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதனாலேயே போராட்டங்களை முடக்கிவிட முயற்சிகள் தொடர்வதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே வடமராட்சி கிழக்கில்  அண்மை நாட்களாக மீண்டும் சில வாடிகள் அமைக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் பிற மாவட்ட மீனவர்கள் 9 நிறுவனங்களின் ஊடாக கடல் அட்டை பிடிப்பில் ஈடுபடுவதோடு அரச நிலங்களை பிரதேச செயலாளரின் அனுமதியின்றியும் ஆக்கிரமித்து வாடி அமைத்து தங்கியிருந்து தொழில் புரிந்து வருகின்றனர்.

தற்போது குறித்த பகுதியில் மேலும் 3 வாடிகள் அமைக்கப்படுவதாக உள்ளூர் மீனவர் கவலை தெரிவித்துள்ளனர்.அத்துடன் புதிய தரப்பின் வரவினை யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்களமும் பிரதேச செயலகமும் கண்மூடி மௌனித்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

No comments