இலங்கை

மையவாடி சிரமதானம் !

யாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி இன்று(15) ஞாயிறு காலை  சிரமதானம் செய்யப்பட்டது.


யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம்  நியாஸ் (நிலாம்) மற்றும் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் நிபாஹீர் ஆகியோரின் அணுசரனையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.


குறித்த  சின்னப்பள்ளிவாசல் மையவாடி பற்றைகளால் சூழ்ந்து காணப்பட்டதை அடுத்து மேற்படி சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன்  தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் குறித்த மையவாடியை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment