சிறிலங்காவின் முப்படைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டளவு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.
போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு, கடத்தல் போன்றவற்றுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, சிறிலங்கா காவல்துறையினரின் அதிகாரங்களை முப்படையினருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், வழங்கும் வகையில், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான, சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில், இந்த சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளை வரையுமாறு சட்டமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.
இதுபற்றி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் கஞ்சா, ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருள்களின் கடத்தல், பயன்பாடு என்பன அதிகரித்துள்ள நிலையிலேயே சிறிலங்கா ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல், விற்பனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் தாம் கையெழுத்திடப் போவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment