சிறிலங்காவில் மரண தண்டனை - மன்னிப்புச் சபை எதிர்ப்பு
சிறிலங்காவில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இத்தகைய குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, தண்டனையை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரித்தானியாவைத் தளமாக கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபையும், மரணதண்டனையை நிறைவேற்றும் முடிவைக் கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு மேலாக மரணதண்டனையை நிறைவேற்றாமல் பெற்றுக் கொண்ட நற்பெயரை சிறிலங்கா கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் கடைசியாக 1976 ஆம் ஆண்டிலேயே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment