யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் இனம் தெரியாத நபரொருவரால் மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
இன்று காலை வழமை போல் பெற்றோர் ஒருவர் தனது 6 வயது நிரம்பிய பெண் பிள்ளையையும் தனது உறவினரின் 8 வயது நிரம்பிய ஆண் பிள்ளை ஒருவரையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் காலை உணவாக பணிஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, பாடசாலையின் அருகாமையில் இறக்கி விட்டு வீடு சென்றுள்ளார்.
வீடு சென்ற தாய் அவரது பிள்ளை விட்டுச் சென்ற பொருள் ஒன்றைத் திரும்பக் கொடுப்பதற்காக மீண்டும் பாடசாலை சென்றுள்ளார்.
ஆனால் மாணவர்கள் இருவரும் வகுப்பறையில் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அதிபரும் சென்று பார்த்தவிடத்து இரு பிள்ளைகளையும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பிள்ளைகள் இருவரையும் இனம் தெரியாத ஒருவர் ஏற்றிச் சென்றுள்ளதனை பாடசாலை மாணவர் ஒருவரின் தாயாரும் கண்டுள்ளேன் எனப் பாடசாலை நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ். சுழிபுரத்தில் பாடசாலை விட்டுத்திரும்பிய நிலையில் ரெஜினா எனும் சிறுமி பாலியஸ் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 Comments :
Post a Comment