Header Ads

test

யாழ் கோட்டைக்குள் ''அம்மாச்சி'' உணவகம் அமைப்போம் - சிவாஜிலிங்கம்

யாழ் கோட்டைக்குள் இராணுவத்தினர் படை முகாம் அமைத்தால் நாங்களும் கோட்டைக்குள் ''அம்மாச்சி'' உணவகம் அமைப்போம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று வடமாகாணசபையில் உறுப்­பி­னர் சபா.குக­தா­ஸின் பிரே­ரணை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கோட்டைக்குள் அனுமதி பெறாது படையினர் படை முகாம் அமைக்கின்றனர். பதிலுக்கும் நாங்களும் கோட்டைக்குள் ''அம்மாச்சி'' உணவகம் அமைப்போம். மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டைக்குள் வருகின்றோம் யார் தடுக்க வருகிறார்கள் என்பதையும் பார்ப்போம் என்றார் சிவாஜிலிங்கம்.

No comments