தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்
தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை ஒருபோதும் கொண்டுவராது என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.
இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வடமாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் மக்களுக்கு அபிவிருத்தியை, சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
முஸ்லீம் அரசியல்வாதிகளை நீங்கள் பாருங்கள் அவர்கள் இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பாரிய அபிவிருத்தியை கொண்டு வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடாத்திக் கொண்டும் இருக்கின்றார்கள் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment