Header Ads

test

கிளிநொச்சியில் விபத்து! பாடசாலை மாணவி பலி!

கிளிநொச்சியில் பாடசாலை சென்ற மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று (03) காலை 7.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கிளிநொச்சி உமையாள்புரப் பகுதியில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ராஜ்குமார் யதுர்சா என்ற மாணவியே விபத்தில் உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய், பாடசாலைக்கு அருகில் உள்ள பாதசாரிகள் கடவையில் இறக்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். 

இதன் போது பாதசாரிகள் கடவையை குறித்த மாணவி கடக்க முற்பட்ட போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் ஒன்று குறித்த மாணவயை மோதியுள்ளது. 

உடனடியாக குறித்த வாகனத்திலேயே மாணவியை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றிருந்த போதும் மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி குடும்பத்தில் ஒரேயொரு பெண் பிள்ளை என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகன சாரதியையும் கைது செய்துள்ளனர். 

No comments