விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் குறித்து ஆற்றிய உரை தொடர்பாக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்களிடமும் நீண்ட நேரம் விசாரணை இடம்பெற்றது.
ஒரு மணித்தியாளங்களைத் தாண்டி இந்த விசாரணைகள் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் மீள உருவாக்க ப்படவேண்டும் எனவும், தமிழீழ விடுதலை புலிகள் இருந்தால் மட்டுமே மக்கள் நின்மதியாக இருக்க முடியும் என அமைச்சர் கூறியதான கருத்து தொடர்பிலேயே மேற்படி விசாரணைகள் இடம்பெற்றது.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்விலேயே இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஷ்வரன் மேற்படி உரையினை ஆற்றியிருந்தார். இது தொடர்பிலேயே திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவு இந்த விசாரணைகளை நடாத்தியுள்ளது.
இதேவேளை விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியபோது மண்டபத்தில் கரகோசம் எழுப்பிய அரச ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment