Header Ads

test

உடனடியாக கொழும்பிற்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு


இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக கொழும்புக்கு வருமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நடந்த அரச விழா ஒன்றில் விடுதலைப் புலிகள் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்த விசாரணைகளுக்காகவே, உடனடியாக கொழும்புக்கு வருமாறு சிறிலங்கா பிரதமர், உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்று விஜயகலா மகேஸ்வரன் சிறிலங்கா பிரதமரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

No comments