Header Ads

test

ஊழல்வாதிகளென்ற வலி புரிகின்றதா?சத்தியலிங்கம் கேள்வி!

ஊடகங்களில் கைத்துப்பாக்கி பெற்றதான செய்திகள் வருகின்ற போது துடித்தழும் அமைச்சர் அனந்தி இதே ஊடகங்களில் ஊழல்வாதிகளென எமது பெயர் வரும் போது எவ்வாறு கவலையடைந்திருப்போம் என்பதனை புரிந்து கொள்ளவேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இப்போதும் காணுகின்றவர்கள் எல்லோரும் நீங்கள் நல்லாக பணம் அடித்து செற்றிலாகிவிட்டீர்களென சொல்கின்றனர்.ஊழலில் நான் ஈடுபட்டதாக முதலமைச்சரிடமும் ஊடகங்களிலும் சொல்லித்திரிந்தவர்களுள் அனந்தியும் ஒருவர்.

தற்போது ஊடகங்களில் செய்திவருகின்ற போது அவருக்கு வலிப்பது போல எங்களிற்கு ஒவ்வொரு தடவையும் ஊழலில் ஈடுபட்டவர்களென செய்தி வரும் போது எவ்வாறு வேதனை அடைந்திருப்போமென புரிந்து கொள்ளவேண்டுமென சத்தியலங்கம் தெரிவித்தார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் எடுத்துச்சென்ற கோவைகள் பற்றி முன்னர் செய்தி வந்திருந்தது. அது தொடர்பில் மற்றொரு உறுப்பினரான சயந்தன் கேள்வி எழுப்ப முற்பட்டிருந்த நிலையில் அவைத்தலைவர் அவ்விவகாரத்தை முடிவுக்க கொண்டுவந்திருந்தார்.

No comments